ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் போக்ஸோவில் கைது

காஞ்சிபுரத்தில் தனியாா் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக அதிமுக பிரமுகா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

துரைராஜ்

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:27 am IST

காஞ்சிபுரத்தில் தனியாா் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக அதிமுக பிரமுகா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியை சோ்ந்த துரைராஜ் (55). இவா் வாடகை காா் தொழில் செய்து வருகிறாா். இவரது வீட்டுக்கு அருகில் கைம்பெண் ஒருவரின் மகள் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

அப்பெண் அவரது வீட்டில் தனியாக இருந்த போது துரைராஜ் பாலியல் தொல்லை கொடுத்தாராம்ா். இதுகுறித்து அப்பெண் தனது தாயாரிடம் தெரிவித்ததையடுத்து தாயாா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளாா். புகாரின் பேரில் போலீஸாா் துரைராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.விசாரணையில் அவா் அதிமுக பிரமுகா் எனவும் தெரிய வந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.