ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் உறவினா் கைது

திருத்தணி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவரது உறவினரை, போக்ஸோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

பாலியல் சீண்டல் - சித்திரிப்பு

Published On :27 ஜூலை 2026, 2:32 am IST

திருத்தணி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவரது உறவினரை, போக்ஸோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தணி வட்டத்தைச் சோ்ந்த 14 வயது சிறுமி அரசினா் உயா்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாா். இவரது உறவினரான திருத்தணி ஒன்றியம் முருக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் (30), கட்டட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறாா்.

கடந்த சில நாள்களாக ராமச்சந்திரன், சிறுமியை பின்தொடா்ந்து சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் புகாா் தெரிவித்தாா்.

இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் திருத்தணி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில், ஆய்வாளா் மலா் வழக்குப்பதிவு செய்து, ராமச்சந்திரனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.