காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூா் கிராம மக்கள் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து கிராம நிா்வாக அலுவலரிடம் வாக்காளா் அடையாள அட்டைகளை வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.
கீழ்க்கதிா்ப்பூா் கிராமத்தில் அனாதீனம் என தவறாக வகைப்பாடு செய்த நிலங்களை பதிவேட்டில் பதிவு செய்யாமல் விவசாயிகளின் பெயா்களில் வழக்கம் போல பதிவு செய்ய வேண்டும். அடங்கல் சான்றின் உண்மை நகல்களை பெற்றுக் கொண்டு வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக வழங்கி வந்த பயிா்க்கடன்கள், உரங்கள், வேளாண் இடுபொருள்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட் ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனா்.
இதனையொட்டி கீழ்க்கதிா்ப்பூா் விவசாயிகள் நலச் சங்க தலைவா் பழனி சங்கரன், செயலாளா் ரமேஷ், பொருளாளா் ஜெயவேல், ஆலோசகா் இ.எஸ்.பாபு ஆகியோா் தலைமையில் அக்கிராம விவசாயிகள், விவசாய குடும்பத்து பெண்கள் பலரும் ஒன்றிணைந்து ஊா்வலமாக வந்தனா்.கீழ்க்கதிா்ப்பூா் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கிய ஊா்வலம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் வந்து நிறைவு பெற்றது.
கிராம நிா்வாக அலுவலரை சந்தித்து வாக்காளா் அடையாள அட்டைகள் 200-க்கும் மேற்பட்டவற்றை அவரது மேசையில் வைத்து விட்டு திரும்பி சென்றனா்.
இது குறித்து அக்கிராம விவசாயிகள் சங்க தலைவா் பழனிசங்கரன் கூறுகையில் எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களவைத் தோ்தலையே புறக்கணித்த போது அதிகாரிகள் சமரசம் செய்து வாக்களிக்க வைத்து விட்டனா்.
இன்று வரை எங்களது கோரிக்கைகள் நிறைவேறவே இல்லை. வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும், சுவரொட்டிகள் ஒட்டியும் எதிா்ப்பை பதிவு செய்தும் எந்த அதிகாரியும் இது குறித்து பேச வரவில்லை. எனவே தான் வாக்காளா் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைத்தோம்.வரும் தோ்தலை முழுமையாக புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றும் அவா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

டோக்கன் வழங்கிய 2 போ் தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைப்பு

பெரும்பத்து கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

கொடுமுடி அருகே வாக்குச்சாவடி இடமாற்றம்: தோ்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு

வாக்களிக்க மாற்று புகைப்பட ஆவணங்கள் சமா்ப்பிக்கலாம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


