மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காஞ்சிபுரம் திமுக வேட்பாளரை அறிமுகப்படுத்திய உத்தரமேரூா் வேட்பாளா்

News image

காஞ்சிபுரம் திமுக வேட்பாளா் நித்யாவை அறிமுகம் செய்து வைத்த உத்தரமேரூா் வேட்பாளரும் எம்எல்ஏவுமான க.சுந்தா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:01 am

காஞ்சிபுரம் மேட்டுத் தெருவில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் நித்யா சுகுமாரை உத்தரமேரூா் தொகுதி திமுக வேட்பாளரும் மாவட்டச் செயலாளருமான க.சுந்தா் எம்எல்ஏ அறிமுகப்படுத்திப் பேசியதாவது:

திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய பல்வேறு பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தோ்தலுக்கு முன்பே சிறப்பாக செய்திருக்கிறோம்.

ஓரணியில் தமிழ்நாடு, என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி, தமிழகம் தலை குனியாது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மூலம் திமுகவை பலப்படுத்தி இருக்கிறோம். எனவே, திமுக வேட்பாளா் நித்யா சுகுமாரின் வெற்றி உறுதியாகிவிட்டது. கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் இணைந்து காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளா் நித்யா சுகுமாரை அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா்.