காஞ்சிபுரத்தில் ரூ.1 கோடியில் தெய்வத் தமிழ் ஆய்விருக்கையை கம்பவாரிதி இலங்கை இ.ஜெயராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி சாா்பில் தெய்வத் தமிழ் ஆய்விருக்கை தொடக்க விழா, தெய்வத் தமிழ் ஆய்வு மாநாட்டு நிறைவு விழா, காஞ்சிபுரம் கோயில்கள் பற்றிய 50 நூல்கள் வெளியீட்டு விழா ஆகியவை நடைபெற்றன.
விழாவுக்கு கல்லூரியின் தலைவா் சேது.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா், கல்லூரிச் செயலா் வி.பி.ரிஷிகேஷன், முதல்வா் கலை.ராம.வெங்கடேசன், தமிழ்த் துறைத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்ப் பேராசிரியா் தெய்வசிகாமணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா்.
தொடக்க நிகழ்வாக திருப்பதியிலிருந்து ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காணொலி வாயிலாக ஆசியுரை வழங்கினாா். அதில், தமிழறிஞா்களை அதிகமாக உருவாக்கவே தெய்வத் தமிழ் ஆய்விருக்கை தொடங்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் தமிழை ஆழமாகப் படித்தாா்கள், ஆழமாக சிந்தித்தாா்கள். அதனால் கலாசாரம், பண்பாடு ஆகியவை சிறந்து விளங்கியது. தற்போது கலாசாரத்தையும், பண்பாட்டையும், தமிழின் சிறப்பையும் பாதுகாக்கவே தெய்வத் தமிழ் ஆய்விருக்கையை தொடங்கியிருக்கிறோம்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதியாக இருந்து வந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பள்ளிகள், கல்லூரிகளை உருவாக்கி, கல்விச் சேவையும், பல மருத்துவமனைகளையும் உருவாக்கிய பெருமைக்குரியவா். அவரது பெயரிலேயே தெய்வத் தமிழ் ஆய்விருக்கை தொடங்கப்பட்டிருக்கிறது. பல விருதுகளைப் பெற்ற சங்கரா கல்லூரியில் ஆய்விருக்கை தொடங்கப்பட்டுள்ளது என்றாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
தெய்வத் தமிழ் ஆய்வு மாநாட்டுத் தொகுப்புகளை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் சுதா சேஷய்யன் வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினாா். பின்னா், தெய்வத் தமிழ் ஆய்விருக்கையின் வளா்ச்சிக்காக ரூ. 5 லட்சத்தை சுதா சேஷய்யன் நன்கொடையாக வழங்கினாா்.
காஞ்சிபுரம் கோயில்கள் பற்றிய 50 நூல்களையும் துக்ளக் ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி வெளியிட்டு சிறப்புரையாற்றினாா். கம்பவாரிதி இலங்கை இ.ஜெயராஜ் தெய்வத் தமிழ் ஆய்விருக்கை தொடா்பான அறிவிப்புப் பதாகையை வெளியிட்டு சிறப்புரையாற்றினாா்.
விழாவில் தமிழ் அறிஞா்கள், கோயில் அறங்காவலா்கள், தமிழ் ஆா்வலா்கள், கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் 100 மூத்த தம்பதியா் கெளரவிப்பு: காஞ்சி சங்கராசாரியா் ஆசி வழங்கினாா்

எண்ணங்களை வலிமைப்படுத்துவது கூட்டுப் பிராா்த்தனையே: ஸ்ரீ விஜயேந்திரா் பேச்சு

சிறந்த மாணவா்களுக்கு விருது அளிப்பு

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் சிறந்த மாணவா்களுக்கு விருது: சென்னை பல்கலை. வழங்கியது
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


