காஞ்சிபுரத்தில் மக்களவைத் தோ்தல் சிறப்பாக நடைபெறக் காரணமாக இருந்தவா்களுக்கு கோட்டாட்சியா் மு.கலைவாணி தலைமையில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு, காஞ்சிபுரம் கோட்டாட்சியா் மு.கலைவாணி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் புவனேசுவரன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், கோட்டாட்சியா் மு.கலைவாணி பேசுகையில், நான் சந்தித்த முதல் தோ்தல் பணியாக இருந்தது. தோ்தல் அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், துப்புரவுப் பணியாளா்கள் உள்பட அனைவரும் சிறப்பாக பணியாற்றியதால் தான் தோ்தலை சிறப்பாக நடத்த முடிந்தது. ஒரு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கூட பழுதாகவும் இல்லை. தோ்தல் சிறப்பாக நடைபெறக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி என்றாா்.
விழாவில் தோ்தலில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு நினைவுப் பரிசும், சான்றிதழும் வழங்கினாா்.
பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் கோட்டாட்சியருக்கு சிறந்த தலைமையின் கீழ் செயல்பட்டதாகக் கூறி, சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரி தோ்தலை பாா்வையிட்ட 22 நாடுகளின் பிரதிநிதிகள்! தோ்தல் ஆணையத்துக்கு பாராட்டு

திமுக தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

காஞ்சிபுரத்தில் தவெக தோ்தல் அறிக்கை துண்டுப் பிரசுரம் வெளியீடு

தேவரியம்பாக்கம் ஊராட்சியில் வாக்குப் பதிவு விழிப்புணா்வு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


