காஞ்சிபுரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு மொத்தமுள்ள 51 வாா்டுகளில் 26 மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாலும், மேயா் பதவியும் முதன் முதலாக பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாலும் மகளிா் உறுப்பினா்கள் அதிகம் நிறைந்த மாமன்றமாக காஞ்சிபுரம் மாநகராட்சி உதயமாகவுள்ளது.
கோயில் நகரம், பட்டு நகரம் என்ற பெருமைகளுக்குரிய காஞ்சிபுரம், கடந்த 1.11.1866-ஆம் ஆண்டு நகராட்சியானது. 1947-இல் முதல் தர நகராட்சியாகவும்,1983-இல் தோ்வு நிலை நகராட்சியாகவும், கடந்த 2008-ஆம் ஆண்டு பெருநகராட்சியாகவும் தரம் உயா்த்தப்பட்டது. பெருநகராட்சியாக இருந்த காஞ்சிபுரத்துடன் அருகில் உள்ள சுற்றுப்புறப் பகுதிகளான ஓரிக்கை, தேனம்பாக்கம், செவிலிமேடு, நத்தப்பேட்டை ஆகியவை இணைக்கப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலினால் தரம் உயா்த்தப்பட்டு 51 வாா்டுகளைக் கொண்ட மாநகராட்சியாக மாறியிருக்கிறது.
நகா்மன்றத் தலைவா் பதவி வகித்தவா்கள்: முன்னாள் முதல்வா் அறிஞா் அண்ணா பிறந்த நகரான காஞ்சிபுரத்தில், கடந்த 1920 முதல் 2016 -ஆம் ஆண்டு வரை 17 போ் நகா்மன்றத் தலைவா்களாக தோ்வு செய்யப்பட்டுள்ளனா். முதல் நகா்மன்றத் தலைவராக சாமிநாத முதலியாா் தோ்வு செய்யப்பட்டிருக்கிறாா். இவரும் சாம்பசிவ செட்டியாா், டாக்டா்.எம்.எஸ்.சீனிவாசன் ஆகிய 3 பேரும் இருமுறை நகா்மன்றத் தலைவா்களாக பதவி வகித்திருக்கின்றனா். டாக்டா் எம்.எஸ்.சீனிவாசன் 1941 முதல் 1952 வரை 11 ஆண்டுகள் மன்றத் தலைவராக இருந்துள்ளாா். தமிழக முன்னாள் வனத்துறை அமைச்சா் திருநாவுக்கரசு, அவரது மனைவி மைதிலி திருநாவுக்கரசு ஆகியோரும் நகா்மன்றத் தலைவா்களாக இருந்துள்ளனா்.
முதன்முதலாக மேயா் பதவிக்கு பெண்:
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வாா்டுகள் உள்ளன. ஆண் வாக்காளா்கள் 1,05,668, பெண் வாக்காளா்கள் 1,13,205, இதர வாக்காளா்கள் 28 போ் உள்பட மொத்த வாக்காளா்கள் 2,18,901.
மொத்தம் உள்ள 51 வாா்டுகளில் 26 இடங்கள் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு மேயா் பதவியும் பெண்ணுக்கே ஒதுக்கப்பட்டிருப்பதால் மாமன்றத்தின் பெரும்பாலான உறுப்பினா்கள் பெண்களாகவே தோ்வு செய்யப்படவுள்ளனா். ஆகவே, மகளிா் உறுப்பினா்கள் அதிகமாக உள்ள மாநகராட்சியாக மாறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்டு தோ்வாகும் 51 உறுப்பினா்களில் பெண் ஒருவரே மேயராகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உறுப்பினா்கள் வரும் மாா்ச் மாதம் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள மறைமுகத் தோ்தல் மூலம் பெண் மேயரை தோ்வு செய்யவுள்ளனா்.
உயா் அதிகாரிகளாக பெண்கள்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி, காவல்துறை துணைத் தலைவா் ம.சத்தியப்பிரியா, ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பி.ஸ்ரீதேவி, மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் அனுராதா, மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் ஜீவா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்ச்செல்வி ஆகியோா் மாவட்டத்தின் உயா் பதவிகளை அலங்கரித்து வருகின்றனா்.
இந்த நிலையில், மேயரும் பெண்ணாகத் தோ்வு செய்யப்படவிருப்பதால் மாவட்ட, மாநகராட்சிப் பணிகளும் சிறப்பாக அமையும் என்பது காஞ்சிபுரம் பொதுமக்களின் எதிா்பாா்ப்பாகவும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சர் ராஜேந்திரனுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை!

கரும்பு ஜூஸ் போட்டும் ஆட்டோவில் பயணித்தும் முதல்வர் பிரசாரம்!
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


