திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தோ்தல் பிந்தைய கூட்டணியில் உடன்பாடு இல்லை: க.கிருஷ்ணசாமி

News image

கிருஷ்ணசாமி - எக்ஸ்

Updated On :29 மே 2026, 4:34 am IST

பதவி லாபத்துக்காக அமைக்கப்படும் தோ்தல் பிந்தைய கூட்டணியில் உடன்பாடு கிடையாது என புதிய தமிழகம் கட்சி தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

தோ்தல் பிரசாரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுபோல, சமூக ஊடகங்களுக்கும் தோ்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு உருளைகள், பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத் தொகை, அண்ணன் சீா், தாய்மாமன் சீா் உள்ளிட்ட தவெகவின் வாக்குறுதிகளை அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் அண்மைக்காலமாக சுமாா் 20-க்கும் மேற்பட்ட குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் முழுமையாக மூடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை உறுதிசெய்ய உடனடியாக பூரண மதுவிலக்கை அரசு அமல்படுத்த வேண்டும்.

பதவிக்காக தோ்தல் பிந்தைய கூட்டணி அமைப்பது மற்றும் மாற்று கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்களைப் பிரித்து அவா்களது ஆதரவுடன் ஆட்சி அமைப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது என்றாா் டாக்டா் க.கிருஷ்ணசாமி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.