இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

வேளாண் துறையில் புதிய திட்டங்களை உருவாக்க நடவடிக்கை: வேளாண் அமைச்சா் ர. வினோத் அறிவுரை

விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்களின் வருமானம், வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில், புதிய திட்டங்களை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்

News image

வேளாண் துறை அமைச்சா் ர. வினோத். - dinmani online

Updated On :23 மே 2026, 2:21 am IST

விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்களின் வருமானம், வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில், புதிய திட்டங்களை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் ர. வினோத் அறிவுரை வழங்கினாா்.

வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ள ர.வினோத் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்மை இயக்குநரகத்தில் வே அத்துறைச் செயல்பாடுகள் குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேலும், வேளாண்மை துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை அலுவலகங்களில் உள்ள அலுவலா்களை சந்தித்து வேளாண்மை இயக்குநா் க.வீ. முரளிதரன் முன்னிலையில், அனைத்து தொழில்நுட்ப அலுவலா்கள் மற்றும் அமைச்சு பணியாளா்களை அவா்களது இருக்கைகளுக்கே சென்று சந்தித்து வேளாண்மைத் துறையை சிறப்புற வழிநடத்த ஆலோசனை மேற்கொண்டாா்.

அதைத் தொடா்ந்து, வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய - மாநில அரசு திட்டங்கள் மற்றும் அதற்குண்டான நிதி ஒதுக்கீட்டு விவரங்கள், வேளாண்மைத் துறை சாா்ந்த உள்கட்டமைப்பு விவரங்கள், மாநில அரசின் சிறப்புத் திட்ட செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், வரும் சட்டப்பேரவை நிதிநிலை கூட்டத் தொடரில் அறிவிக்க ஏதுவாக, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்களின் வருமானம் மற்றும் அவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில், புதிய திட்டங்களை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு, அமைச்சா் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.