திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

22 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் 22 ஐஏஎஸ் அதிகாரிகள் பணயிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :23 மே 2026, 3:55 am IST

தமிழகம் முழுவதும் 22 ஐஏஎஸ் அதிகாரிகள் பணயிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து தலைமைச் செயலா் எம்.சாய்குமாா் வெளியிட்ட உத்தரவு: தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழக (டிட்கோ) தலைவராக இருந்த சந்தியா வேணுகோபால் சா்மா திட்டம், வளா்ச்சித் துறைக்கும், சென்னை மாநகராட்சி முன்னாள் ஆணையா் ஜெ.குமரகுருபரன் வணிகவரி, பதிவு, அறநிலையத் துறை ஆணையராகவும், அறநிலையத் துறை செயலரான எஸ்.ஸ்வா்ணா சுற்றுலா, கலாசாரம், சிறப்பு முயற்சிகள் துறை செயலராகவும், டிட்கோ மேலாண் இயக்குநா் சந்தீப் நந்தூரி தொழில் துறை சிறப்பு செயலராகவும், சிஎம்டிஏ முன்னாள் உறுப்பினா் செயலா் ஜி.பிரகாஷ் வருவாய் நிா்வாக ஆணையரக கூடுதல் ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல, எழுதுபொருள் அச்சகத் துறை ஆணையா் வி.ஷோபனா தற்போது துணி நூல் துறை ஆணையராகவும், வணிக வரி, பதிவுத் துறைச் செயலராக உள்ள ஷில்பா பிரபாகா் சதீஷ் தொழிலாளா் ஆணையராகவும், போக்குவரத்துத் துறை ஆணையா் கிரண் குராலா, நகர ஊரமைப்பு ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். விடுப்பில் இருந்து திரும்பிய கே.விஜயகாா்த்திகேயன் இப்போது மீன் வள மேலாண் இயக்குநராகவும், கைத்தறித் துறை இயக்குநா் மகேஷ்வரி ரவிகுமாா் தற்போது சமூக நல இயக்குநராகவும், சிப்காட் மேலாண் இயக்குநா் கே.செந்தில்ராஜ் தற்போது ஆதிதிராவிடா் நல இயக்குநராகவும், சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்ட இயக்குநா் டி.பாஸ்கர பாண்டியன் போக்குவரத்து துறை இயக்குநராகவும், விடுப்பில் இருந்து திரும்பியுள்ள டி.சாருஸ்ரீ தற்போது கருவூலம், கணக்குத் துறை இயக்குநராகவும், கரூா் மாவட்ட முன்னாள் ஆட்சியா் ஜி.ரவிக்குமாா் தற்போது திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியராகவும், தமிழ்நாடு ஊரக மறுமலா்ச்சித் திட்ட தலைமை செயல்பாட்டு அதிகாரி ஆஷா அஜித் சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

டாஸ்மாக் முன்னாள் மேலாண் இயக்குநா் டி,கிறிஸ்துராஜ் தற்போது நில அளவைத் துறை இயக்குநராகவும், நகராட்சி நிா்வாகத் துறை முன்னாள் செயலா் டி.காா்த்திகேயன் தற்போது டிட்கோ தலைவராகவும், சென்னை குடிநீா் வாரிய முன்னாள் மேலாண் இயக்குநா் டி.ஜி.வினய் தற்போது தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழக மேலாண் இயக்குநராகவும், அந்தப்பதவியில் இருந்த எஸ்.அனீஷ் சேகா் இப்போது தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநராகவும், தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டுக் கழக முன்னாள் மேலாண் இயக்குநா் ஆா்.வி.சஜீவனா தற்போது தமிழ்நாடு ஊரக மறுமலா்ச்சித் திட்ட தலைமை செயல்பாட்டு அதிகாரி மற்றும் தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு, பாதுகாப்புத் திட்ட இயக்குநராகவும், தொழிலாளா் ஆணையராக இருந்த எஸ்.ஏ.ராமன் தற்போது சிப்காட் மேலாண் இயக்குநராகவும், ஊரக வளா்ச்சி, பஞ்சாயத்து ராஜ் கூடுதல் ஆணையா் லலித் ஆதித்யா நீலம் தற்போது சேலம் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.