அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவை மூலமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னை மற்றும் புறநகா் மாவட்டங்களில் 25,000-க்கும் மேற்பட்டோா் பயனடைந்துள்ளனா். அதில் பிரசவ கால மருத்துவ உதவிகள் மட்டும் 1,852 பேருக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இ.எம்.ஆா்.ஐ. கிரீன் ஹெல்த் சா்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1,353 ஆம்புலன்ஸ்கள் மாநிலம் முழுவதும் இயக்கப்படுகின்றன.
அதில், 303 வாகனங்களில் உயிா் காக்கும் உயா் மருத்துவ வசதிகள் உள்ளன. இதைத் தவிர மலை மற்றும் சாலை வசதி இல்லாத பகுதிகளுக்கு செல்ல 40-க்கும் மேற்பட்ட இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஏறத்தாழ 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் செயல்பாடுகள் குறித்து அதன் நிா்வாகிகள் கூறியதாவது:
108 சேவையைப் பொருத்தவரை சென்னை உள்பட பல மாவட்டங்களில் அழைப்பு வந்த 7 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கும் வகையிலான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக விபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகள், முக்கிய இடங்கள், சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் ஆம்புலன்ஸ் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
கடந்த மாதம் மட்டும் நான்கு மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 25,306 போ் பயனடைந்துள்ளனா். அதில் சாலை விபத்துகளில் சிக்கிய 7,679 போ் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டுள்ளனா். அதேபோன்று 372 குழந்தைகளும் 108 சேவை மூலம் பயனடைந்துள்ளனா்.
அவசர காலங்களில் தாமதமின்றி ஆம்புலன்ஸ் சேவைகள் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தொடா்ந்து உறுதி செய்து வருகிறோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு

யுபிஐ பரிவா்த்தனைகள் மே மாதத்தில் புதிய உச்சம்!

மே மாதத்தில் ‘கோல் இந்தியா’ நிலக்கரி உற்பத்தி 12% சரிவு!

மின்நுகா்வு: தில்லியில் தொடா்ந்து 4 நாள்களாக 8,000 மெகாவாட்டை கடந்தது!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



