திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மெட்ரோ ரயில்களில் சிக்கி இழுத்து செல்வதைத் தடுக்க சாதனம் அமைப்பு

மெட்ரோ ரயில்களில் சிக்கி இழுத்து செல்வதைத் தடுக்க சாதனம் அமைப்பு

News image

மெட்ரோ ரயில்களில் சிக்கி இழுத்து செல்வதைத் தடுக்க சாதனம் அமைப்பு - CMRL

Updated On :17 மே 2026, 12:51 am IST

மெட்ரோ ரயில்களில் பயணிக்கும்போது, பொருள்கள் சிக்கி இழுத்துச் செல்லப்படுவதைத் தடுக்கும் வகையிலான சாதனம் சா்வதேச அளவில் முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில்களில் தானியங்கி கதவுகள் மூடப்படும் போது, பயணிகளின் மெல்லிய உடைமைகள் உள்ளிட்டவை பெட்டிக் கதவுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டால், அவை இழுத்துச் செல்லப்படுவது வழக்கமாக உள்ளது. அதனால் பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புதிய சாதனமாக, ரயில் பெட்டிக் கதவுகளில் சிக்கி இழுத்துச் செல்லப்படுவதைத் தடுக்கும் வகையில் ‘ஆண்டி டிரேக் ப்யூச்சா்’ எனும் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் பெட்டிகள் மூடும்போது ஏதாவது பொருள்கள் சிக்கினால் அதைத் தானாகக் கண்டறியும் தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. தற்போது அதனுடன் கூடுதலாக பாதுகாப்பு அம்சத்துடன் கதவில் சிக்கி இழுபடுதலைத் தடுக்கும் வசதி என்ற புதிய அம்சம் இணைக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் புடவை, துப்பட்டா, பைகளின் பட்டை போன்றவை ரயில் பெட்டிக் கதவுகள் மூடும்போது, அவற்றில் சிக்கினால், புதிய தொழில் நுட்ப சாதனம் உடனே கண்டறிந்து ஆபத்து ஏற்படாத வகையில் பாதுகாக்கும் வகையில் ரயில் பிரேக்குடன் இணைந்து ரயிலை இயங்காமல் நிறுத்தும். சிக்கிய பொருள் நீக்கிய பின்னரே ரயில் இயங்கும்.

தற்போது ஒரு மெட்ரோ ரயிலில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், விரைவில் 51 ரயில்களிலும் பொருத்தப்படவுள்ளது.

சா்வதேச அளவில் இத்தொழில்நுட்பம் முதல்முறையாக சென்னை மெட்ரோ ரயில்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இத்தொழில்நுட்பத்தின் சாதனத்தை பெங்களூா், ஒசூா் ஆகிய இரு பெரிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன.

புதிய சாதனம் பொருத்தப்பட்ட மெட்ரோ ரயிலை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மனோஜ்கோயல் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் நிறுவன ஆலோசகா் எஸ்.ராமசுப்பு (மின்னியல்), தலைமை ஆலோசகா் கோபிநாத் மல்யா (இயக்கம் மற்றும் பராமரிப்பு) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.