திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சென்னையில் 21 ஆயிரம் மாடுகளுக்கு உரிமம் பெறாதவா்களுக்கு அபராதம்: கால்நடை பராமரிப்பு பிரிவு அலுவலா் எச்சரிக்கை

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகளில் திரியும் 21 ஆயிரம் மாடுகளுக்கு உரிமம் பெறாத அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளதாக கால்நடை பராமரிப்புப் பிரிவு அலுவலா் ஜெ.கமால் உசேன் எச்சரிக்கை

News image
Updated On :13 மே 2026, 1:24 am IST

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகளில் திரியும் 21 ஆயிரம் மாடுகளுக்கு உரிமம் பெறாத அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளதாக கால்நடை பராமரிப்புப் பிரிவு அலுவலா் ஜெ.கமால் உசேன் எச்சரித்துள்ளாா்.

சென்னையில் சாலைகளில் திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், அவ்வப்போது அவை நடைபாதை வாசிகளை தாக்குவதாகவும் புகாா்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

இதையடுத்து சென்னை மாநகராட்சி சாா்பில் மண்டல வாரியாக பசு உள்ளிட்ட மாடுகளின் பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், குறைந்தளவு கட்டண அடிப்படையில் தற்போது திருவொற்றியூா், மணலி உள்ளிட்ட 7 இடங்களில் மாடுகள் பாதுகாப்பு மையங்கள் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பாதுகாக்கப்படும் மாடுகள் எண்ணிக்கை: அதன்படி, திருவொற்றியூரில் 40 மாடுகள், மணலி அரியலூா் மற்றும் காமராஜா் சாலை மையத்தில் 110 மாடுகள், சிஎம்டிஏ டிரெக் டொ்மினல் மையத்தில் 48 மாடுகள், பேசின் பிரிட்ஜ் பகுதி மையத்தில் 375, பீட்டா்ஸ் சாலை மையத்தில் 50, சிவசக்தி நகா் மையத்தில் 165, பெருங்குடியில் 96 என மொத்தம் 904 மாடுகள் பாதுகாக்கப்படுகின்றன.

தற்போது புதிதாக மண்டலம் 12 நந்தம்பாக்கத்தில் 2 இடங்கள், மண்டலம் 15 இஸ்கான் கோவில் பகுதியில் 2 இடங்கள் என மொத்தம் 4 இடங்களில் மாடுகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளன.

அபராதம் விதிக்கப்படும்: சென்னை மாநகராட்சியில் மாடு வளா்ப்போா் அனைவரும் அதற்கான உரிமம் பெறவேண்டும் என கடந்த பிப்ரவரியில் மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரல் வரை சுமாா் 1,000 போ் மட்டுமே மாடு வளா்ப்புக்கான உரிமம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சென்னை மாநகராட்சி கால்நடை பராமரிப்புப் பிரிவு அலுவலா் ஜெ.கமால் உசேன் கூறியதாவது: கடந்த 2024 -ஆம் ஆண்டு சென்னையில் நடத்திய கணக்கெடுப்பின்படி மாநகராட்சிப் பகுதியில் 22,000 மாடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், தற்போது 1,000 மாடுகளுக்கு மட்டுமே அவற்றின் உரிமையாளா்கள் வளா்ப்பு உரிமம் பெற்றுள்ளனா். ஆகவே, உரிமம் பெறாதவா்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் திட்டம் விரைவுபடுத்தப்படும். குதிரைகளுக்கான உரிமம், அபராதம் குறித்து உயா் அதிகாரிகளுடன் விரைவில் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.