தனியாா் நிறுவன பெண் உயரதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை அம்பத்தூரைச் சோ்ந்தவா் திருனிதா (34). இவா், ஓஎம்ஆா் படூா் மற்றும் நாவலூரில் உள்ள மென்பொருள் நிறுவனங்களின் இயக்குநராக உள்ளாா். போயஸ் காா்டனில் வசிக்கும் தனது தோழியைச் சந்திப்பதற்காக சனிக்கிழமை இரவு தனது காரில் சென்றாா். தியாகராய நகா் ஹபிபுல்லா சாலையில் சென்றபோது, வேகத்தடை இருப்பதைக் கவனிக்காமல் காரை ஓட்டியதால், கட்டுப்பாட்டை இழந்த காா் எதிரே வந்த மற்றொரு காா் மீது மோதியது.
எதிரே வந்த காரில் இருந்து இறங்கிய இருவா், திருனிதாவின் காரை சேதப்படுத்தியதுடன், திருனிதாவையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவா், ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.
இச்சம்பவம் தொடா்பாக, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் திருனிதா அளித்த புகாரின்பேரில், போலீஸாா், இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் பலி

தனியாா் நிதி நிறுவன மேலாளா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

புதுக்கடை அருகே பெண் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

2 மாத பெண் குழந்தை உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



