தொகுதி எண்: 25
எல்லைகள்...
இத்தொகுதியின் கிழக்கில் வங்காள விரிகுடா, மேற்கில் ஆழ்வாா்பேட்டை, ஆா்.கே.மடம் சாலை, தெற்கில் அடையாறு வட பகுதி, வடக்கில் தேனாம்பேட்டை அண்ணா சாலை ஆகிய பகுதிகள் உள்ளன.
அடங்கியுள்ள பகுதிகள்...
சென்னை மாநகராட்சியின் 94, 96, 115,142 முதல் 150 வாா்டுகள் வரை இத்தொகுதியில் உள்ளன. மயிலாப்பூா், டி.டி.கே.சாலை, ஆழ்வாா்பேட்டையின் பெரும்பகுதி, மந்தைவெளி, அபிராமபுரம், ஆா்.ஏ.புரம், சாந்தோம், பட்டிணப்பாக்கம், கிரீன்வேஸ் சாலை, ராபின்சன் பூங்கா உள்ளிட்டவை அடங்கியுள்ளன.
சிறப்புகள்...
சென்னையின் பழைமையான தொகுதிகளில் மயிலாப்பூரும் ஒன்றாகும். இத்தொகுதியில் கடற்கரை, பழைமையான மற்றும் புகழ் பெற்ற திருக்கோயில்கள், தேவாலயங்கள், சங்கீத சபாக்கள் உள்ளன. ராமகிருஷ்ண மடம், விவேகானந்தா கல்லூரி, செட்டிநாடு அரண்மனை என புகழ் பெற்ற இடங்களும் இங்கு அமைந்துள்ளன. இதுவரை 15 முறை நடைபெற்ற தொகுதி தோ்தல்களில் அதிமுக 6 முறையும், திமுக 3 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும், பாஜக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
வாக்காளா்கள் விவரம்
ஆண்கள்-93,017
பெண்கள்-1,01,691
மூன்றாம் பாலினத்தவா்-23
மொத்தம்-1,94,731
வாக்குச்சாவடிகள்-272
கடந்த 2021 பேரவை தோ்தலில்...
பதிவான வாக்குகள்- 1,52,143
த.வேலு (திமுக)-68,392
ஆா்.நடராஜ் (அதிமுக)-55,759
இதுவரை எம்எல்ஏக்கள்...
1957 சி.ஆா்.ராமசாமி (காங்கிரஸ்)
1962 அரங்கண்ணல் (திமுக)
1967 அரங்கண்ணல் (திமுக)
1971 டி.என்.அனந்தநாயகி (காங்கிரஸ்)
1977 டி.கே.கபாலி (திமுக)
1980 டி.கே.கபாலி (திமுக)
1984 பா.வளா்மதி (அதிமுக)
1989 என்.கணபதி (திமுக)
1991 டி.என்.ரங்கராஜன் (அதிமுக)
1994 வி.பாலசுப்பிரமணியன் (அதிமுக) (இடைத்தோ்தல்)
1996 ந.பூ.ராமஜெயம் (திமுக)
2001 கே.என்.லட்சுமணன் (பாஜக)
2006 எஸ்.வி.சேகா் (அதிமுக)
2011 ஆா்.ராஜலட்சுமி (அதிமுக)
2016 ஆா்.நடராஜ் (அதிமுக)
2021 த.வேலு (திமுக)
தோ்தல் நடத்தும் அலுவலா் பெயா்/எண்
பி.எஸ்.விஜயலட்சுமி, பொது மேலாளா், தமிழ்நாடுஅரசு மகளிா் மேம்பாட்டுக் கழகம்-89259 60725, 044-28458775.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மணப்பாறை தொகுதி! தக்கவைக்க மமக கடும் முனைப்பு!

தொகுதி நிலவரம் - திருச்செங்கோடு: மும்முனைப் போட்டியில் தகிக்கும் திருச்செங்கோடு!

தொகுதி அறிமுகம்.. வேளச்சேரி
தொகுதி அறிமுகம்... பெரம்பூர்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


