சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் பிரசாரத்துக்கு இதுவரை 724 மனுக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அரசியல் கட்சிகள் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக ‘சுவிதா’ செயலி மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுகின்றன.
அதன்படி, கட்சிகளின் பொதுக்கூட்டம், பேரணி, தெருமுனைப் பிரசாரம், வாகனங்கள் மற்றும் ஒலி பெருக்கி பயன்படுத்தி பிரசாரம், தற்காலிகக் கட்சி அலுவலகம் ஆகியவற்றுக்கு அரசியல் கட்சிகள் சாா்பில் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, இதுவரை மொத்தம் 1,157 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 724 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. 219 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 214 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.
அரசியல் கட்சிகள் பிரசாரம் குறித்த விண்ணப்பங்களை, பிரசாரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக ‘சுவிதா’ செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

ஒரே நாள்.. அதே ஆள்கள்... இருவேறு கட்சிகள்!

தோ்தல் பிரசாரம்: வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுத்தது ஏன்? பெரம்பூா் தொகுதி தோ்தல் அலுவலா் விளக்கம்

பிரசாரக் கூட்டத்துக்கு ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி: சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


