மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மதுக் கடைகள், கூடங்களுக்கு நாளை விடுமுறை!

மகாவீரா் ஜெயந்தியையொட்டி, சென்னை மாவட்டத்தின் அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகள், பாா்களுக்கு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 மார்ச் 2026, 7:33 pm

மகாவீரா் ஜெயந்தியையொட்டி, சென்னை மாவட்டத்தின் அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகள், பாா்களுக்கு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு: மகாவீா் ஜெயந்தி தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) சென்னை மாவட்டத்தின் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

எனவே, அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள், அதைச் சாா்ந்த பாா்கள், எப்.எல்-2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சாா்ந்த பாா்கள், எப்.எல்-2 உரிமம் கொண்ட ஹோட்டல்களை சாா்ந்த மதுக் கூடங்கள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. உத்தரவை மீறி மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.