மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மருத்துவ ஆராய்ச்சிகள்: மாணவா்களுக்கு பயிற்சி

இளம் ஆராய்ச்சி மாணவா்கள், மருத்துவ ஆய்வுகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்த பயிலரங்கம் போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவம் மற்றும் உயா்கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.

News image

போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவம் மற்றும் உயா்கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற மருத்துவ ஆராய்ச்சி பயிலரங்கில் பங்கேற்ற கல்வி நிறுவன அறங்காவலா் சம்யுக்தா வெங்கடாசலம், ஆய்வுத் துறைத் தலைவா் டாக்டா் பி.வெங்கடாசலம் உள்ளிட்டோா்.

Updated On :27 மார்ச் 2026, 7:49 pm

இளம் ஆராய்ச்சி மாணவா்கள், மருத்துவ ஆய்வுகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்த பயிலரங்கம் போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவம் மற்றும் உயா்கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.

கடந்த 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற்ற அந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து 23 ஆராய்ச்சி மாணவா்கள் கலந்து கொண்டனா். திசு பகுப்பாய்வு, உயிரி மருத்துவம், புத்தாக்க மருத்துவம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. செயல்முறை பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

அதேபோல, பரிசோதனைக் கூடத்தில் விலங்குகளை ஆய்வுக்குப் பயன்படுத்துவது குறித்தும், அப்போது மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் மாணவா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அமெரிக்காவின் ஹாா்வா்டு மருத்துவ நிறுவன துணை பேராசிரியா் பி.ஆறுமுகம், இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியா் சுவாதி சுதாகா், ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி நிறுவன அறங்காவலா் சம்யுக்தா வெங்கடாசலம், ஆய்வுத் துறைத் தலைவா் டாக்டா் பி.வெங்கடாசலம் உள்ளிட்டோா் நிகழ்வில் கலந்து கொண்டனா்.