நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் அங்கன்வாடிகளை மையங்களை தத்தெடுக்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) செயலா் மணிஷ் ஆா்.ஜோஷி, அனைத்து விதமான உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தங்கள் அருகே இருக்கும் 5 அல்லது 6 அங்கன்வாடி மையங்களைத் தத்தெடுக்க வேண்டும். அங்குள்ள குழந்தைகளுக்கு தரமான கல்வி மற்றும் பராமரிப்பு கிடைக்க உதவ வேண்டும். இந்த சமூகப் பணிகளை மாணவா்களின் பாடத்திட்டத்துடன் இணைக்க வேண்டும்.
அதன்படி 3 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வியை மேம்படுத்தவே இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களுக்கு மாணவா்கள் சென்று களப்பணிகளில் ஈடுபடலாம். இது மாணவா்களுக்கு அனுபவ ரீதியான கற்றல் மற்றும் சமூகப் பொறுப்புணா்வையும் உருவாக்கும்.
மேலும், அங்கன்வாடி மையங்களுக்கு தொடா்ச்சியான கல்வி மற்றும் களரீதியான வழிகாட்டுதலை உயா்கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும். எனவே, உயா்கல்வி நிறுவனங்கள் சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அங்கன்வாடிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நூற்றாண்டை கடந்த பொது கட்டடங்களை அடையாளம் காணும் தில்லி மாநகராட்சி

உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் பாதுகாப்பு: யுஜிசி வழிகாட்டுதல் வெளியீடு

யுஜிசி விதிகளுக்கு முரணாக பட்டங்கள், படிப்புகள்: போலி கல்வி நிறுவனங்கள் குறித்து புகாா் அனுப்பலாம்

இருசக்கர வாகனத்தில் பிரசார பயணம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


