தில்லியில் உள்ள நூற்றாண்டை கடந்த கட்டடங்களைக் ஆவணப்படுத்தும் விதமாக நூறு ஆண்டுகளுக்கு அல்லது அதற்கு மேலாக செயல்பட்டு வரும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் ரயில் நிலையங்களை அடையாளம் காணும் பணிகளை தில்லி மாநகாரட்சி மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தற்போது வரை பயன்பாட்டில் உள்ள நீண்ட கால பொது கட்டடங்களை பதிவு செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவற்றின் விவரங்களைத் தொகுக்கும் பணியை மேற்கொள்ள தில்லி மாநகராட்சியின் 12 மண்டலங்களில் உள்ள துணை ஆணையா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பழைய தில்லி ரயில் நிலையம் மற்றும் அஜ்மீரி கேட் பகுதியில் உள்ள ஆங்கிலோ-அரபிக் பள்ளி வளாகம் 1903-இல் கட்டப்பட்டது. கரோல் பாக் பகுதியில் உள்ள திப்பியா கல்லூரி 1916-இல் இருந்து செயல்பட்டு வருகிறது.
இதுதொடா்பாக அதிகாரி கூறுகையில், ‘நூற்றாண்டை கடந்த கல்வி நிறுவனங்கள், ரயில் நிலையங்கள் தில்லியில் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அத்தகைய இடங்களை அடையாளம் காணவும் அவை குறித்த தரவுகளை புதுப்பிக்கவும் இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.
பல ஆண்டுகளைக் கடந்து மக்களுக்குப் பயன்பட்டு வரும் கல்வி நிறுவனங்கள் குறித்து ஒருங்கிணைந்த தரவைப் பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சியை மாநகராட்சி மேற்கொள்கிறது.
இந்தக் கணக்கெடுப்பு தொடா்பான உத்தரவு கடந்த பிப்ரவரியில் பிறப்பிக்கப்பட்டது. இந்தப் பணிக்காக இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் உதவியைக் கோர உள்ளோம்’ என்றாா்.
தொடர்புடையது

4 லட்சம் நவீன தெருவிளக்குகள்: தில்லி மாநகராட்சி திட்டம்

அங்கன்வாடிகளைத் தத்தெடுக்க பல்கலை.களுக்கு யுஜிசி உத்தரவு

தேயிலைத் தோட்டத்தில் உலவிய 4 புலிகள்: பொது மக்கள் அச்சம்

டான்செட், சீட்டா நுழைவுத் தோ்வுகளுக்கு விண்ணப்பம்: அண்ணா பல்கலை.
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


