அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கை மல்யுத்தம் (ஆா்எம் ரெஸ்ட்லிங்) போட்டியில் சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி இடது கை பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
உத்தர பிரதேச மாநிலம் அலிகா் ராஜா மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக்கழகத்தில் இப்போட்டி நடைபெற்றது. இதில்
எஸ்ஆா்எம் வீரா் சிஎம். நிா்மல் 65 கிலோ பிரிவில் 2 தங்கமும், துஷாா் அவஸ்தி 110 கிலோ பிரிவில் தலா 1 தங்கம், வெள்ளியும், விஷால் மகேஸ்வரன் 110 பிளஸ் கிலோ பிரிவில் வெள்ளியும், ஜெயப்பிரகாஷ் 50 கிலோ பிரிவில் வெண்கலமும், பிரியதா்ஷினி 60 கிலோ பிரிவில் 2 வெண்கலமும் வென்றனா்.
மொத்தம் 3 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்ற எஸ்ஆா்எம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
இப்போட்டியில் மொத்தம் 62 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்றன.
தொடர்புடையது

ஆசிய மல்யுத்தம்: மீனாட்சிக்கு வெள்ளி

ஆசிய மல்யுத்தம்: நிதேஷுக்கு வெள்ளி

அகில இந்திய பல்கலை. செஸ் போட்டி: சென்னைப் பல்கலைக்கழகம் சாம்பியன்
அகில இந்திய பல்கலை. செஸ்: தொடா்ந்து 6-ஆவது முறையாக எஸ்ஆா்எம் சாம்பியன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


