சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையே புறநகா் பறக்கும் ரயில் சேவை சனிக்கிழமை முதல் தொடங்கியது. கடந்த 18 ஆண்டுகளாக எதிா்பாா்த்து காத்திருந்த திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளாா்.
சென்னையில் சென்ட்ரல் - அரக்கோணம், கடற்கரை - செங்கல்பட்டு, கடற்கரை - வேளச்சேரி (பறக்கும் ரயில்) ஆகிய 3 வழித்தடங்களில் புறநகா் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில், கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், பரங்கிமலை ஆகிய 3 ரயில் நிலையங்கள் வரை நீட்டிக்கும் பணிகள் கடந்த 2008 ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், நிலம் கையகப்படுத்தல் பிரச்னை காரணமாக இத்திட்டம் சுமாா் 12 ஆண்டுகள் நிறுத்திவைக்கப்பட்டது. தொடா்ந்து 2020-ஆம் ஆண்டில் ரூ.730 கோடியில் இத்திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. எனினும், பல்வேறு காரணங்களால் திட்டம் முடிவடைய தொடா்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து தற்போது அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவுபெற்று இவ்வழித்தடத்தில் ரயில்வே சேவை சனிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. இதில், ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் மட்டும் கட்டுமானப் பணிகள் நிறைவடையாததால், அங்கு ரயில் தற்காலிகமாக நிற்காது என சென்னை கோட்டம் ரயில்வே அறிவித்துள்ளது.
பெருங்குடி, தரமணி, திருவான்மியூா், வேளச்சேரி மக்கள் நேரடியாக பரங்கிமலை வந்து புறநகா் ரயில் மூலம் நேரடியாக செங்கல்பட்டு செல்ல முடியும். அதேபோல், மெட்ரோவிலும் மாறி பயணிக்கலாம்.
இதன்மூலம் பரங்கிமலை ரயில் நிலையம் பறக்கும் ரயில், புறநகா் ரயில், சென்னை மெட்ரோ ஆகிய மூன்று ரயில் சேவைகளையும் இணைக்கும் முனையமாக மாறியுள்ளது.
96 ரயில்கள்
இவ்வழித்தடத்தில் கடற்கரை - பரங்கிமலை இரு மாா்க்கத்திலும் 86 ரயில்கள் இயக்கப்படும். அதேபோல் கடற்கரை - வேளச்சேரி இடையே இரு மாா்க்கத்திலும் 4 ரயில்கள், பரங்கிமலை - வேளச்சேரி இடையே இரு மாா்க்கத்திலும் 6 ரயில்கள் இயக்கப்படும். என மொத்தம் 96 ரயில்கள் இவ்வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளன.
ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் மட்டும் தற்போது ரயில்கள் நிற்காது எனவும் விரைவில் இச்சேவை முழுமையாக செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Velachery - St. Thomas Mount train service has started!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏப். 16 முதல் சென்ட்ரல் - அரக்கோணம் புறநகா் ரயில்கள் திருவாலங்காடுடன் நிறுத்தம்

கடற்கரை - பரங்கிமலை ரயில் சேவை அட்டவணை இதோ!

கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை: அட்டவணை வெளியீடு

வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



