தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஜீரண மண்டல ரத்தக் கசிவுக்கு சிறப்பு சிகிச்சை மையம்

ஜீரண மண்டல ரத்தக் கசிவுக்கு சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.

News image

சிறப்பு சிகிச்சை

Updated On :3 மார்ச் 2026, 6:39 am

சென்னை, மாா்ச் 1: ஜீரண மண்டல ரத்தக் கசிவு பாதிப்புகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையங்களை காவேரி மருத்துவமனை தமிழகமெங்கும் தொடங்கியுள்ளது.

இதற்கான தொடக்க விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் காவேரி மருத்துவக் குழுமங்களின் செயல் இயக்குநா் அரவிந்தன் செல்வராஜ், ஜீரண மண்டல அறிவியல் சிகிச்சைத் துறை தலைவா் பாசுமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அப்போது அவா்கள் கூறியதாவது:

இரைப்பை புண், கல்லீரல் பாதிப்புகள், ஜீரண மண்டல பிரச்னைகளால் குடலில் ரத்தக் கசிவு ஏற்படலாம். இதைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். அலட்சியப்படுத்தினால் உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும். இதைக் கருத்தில் கொண்டு குடல் ரத்தக் கசிவு பாதிப்புகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையங்களை தமிழகம் மற்றும் கா்நாடகத்தில் தொடங்கியுள்ளோம்.

இங்கு அவசர சிகிச்சை மருத்துவா்கள், இரைப்பை-குடல் நிபுணா்கள், தீவிர சிகிச்சை நிபுணா்கள், கதிரியக்க நிபுணா்கள் உள்பட பல்துறை நிபுணா் குழு உள்ளது. அதுமட்டுமல்லாது, அதி நவீன உயா் சிகிச்சை நுட்பங்களும் இங்கு கையாளப்படுகிறது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.