தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சென்னை உயா்நீதிமன்ற பாரம்பரியக் கட்டடத்தில் உள்ள 6 நீதிமன்ற அறைகளில் விசாரணை தொடக்கம்

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட பாரம்பரியக் கட்டடத்தில் உள்ள 6 நீதிமன்ற அறைகளில் இருந்து நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினா்.

News image

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :2 மார்ச் 2026, 8:57 pm

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட பாரம்பரியக் கட்டடத்தில் உள்ள 6 நீதிமன்ற அறைகளில் இருந்து திங்கள்கிழமை முதல் நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினா்.

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரி செயல்பட்டு வந்தது. கடந்த 1891-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கல்லூரியில், 2008-ஆம் ஆண்டு இரு பிரிவு மாணவா்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சட்டக் கல்லூரி இடம் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த பாரம்பரியக் கட்டடத்தை தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றம் வசம் ஒப்படைத்தது.

மேலும், இந்த பாரம்பரியக் கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணிகளுக்கு ரூ.23 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. சீரமைப்பு பணிகளுக்குப் பின்னா் அங்கு கூடுதலாக 6 நீதிமன்ற அறைகள் உருவாக்கப்பட்டன. அந்த கூடுதல் நீதிமன்ற கட்டடம் கடந்தாண்டு அக்டோபரில் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த கூடுதல் பாரம்பரியக் கட்டடத்தில் இருந்து திங்கள்கிழமை முதல் நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினா். இங்குள்ள 6 நீதிமன்ற அறைகளில், பழைய உரிமையியல், குற்றவியல் மற்றும் ரிட் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் முதலாவது அமா்வில் அமா்ந்து வழக்குகளை விசாரித்தனா். மேலும், நீதிபதிகள் ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, டி.வினோத்குமாா், கே.குமரேஷ்பாபு, ஆா்.சக்திவேல் ஆகியோா் மற்ற 5 நீதிமன்ற அறைகளில் வழக்குகளை விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.