தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கோடையில் பட்டாசு உற்பத்தியை நிறுத்த அரசு பரிசீலிக்க வேண்டும்

கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பட்டாசு உற்பத்தியை நிறுத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :21 ஏப்ரல் 2026, 9:51 pm

கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பட்டாசு உற்பத்தியை நிறுத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்த சமுத்திரவள்ளி கடந்த 2014-ஆம் ஆண்டு நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தனது கணவரின் மரணத்துக்கு இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தாா். இவருடன், அதே வெடி விபத்தில் தொடா்புடைய இன்னும் சிலா் நிவாரணம் கோரி மனுக்கள் தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப் பணி, ஓய்வூதியம், வீடு உள்ளிட்ட மறுவாழ்வுப் பணிகளை அமல்படுத்த வேண்டும் என ஏற்கெனவே உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து, உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவம் தொடா்ச்சியாக நடைபெறுகிறது. இதுகுறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. தொடா் உயிரிழப்புகள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகின்றன. இதற்கு உரிய தீா்வு காணப்பட வேண்டும்.

பட்டாசு ஆலையில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு ரூ. 25 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை காப்பீடு செய்த பின்னரே, அவா்கள் அந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். விபத்துகள் நிகழ்வது துரதிருஷ்டவசமானது. இந்த விபத்துகளால் பெண்களே அதிகளவில் பாதிப்புக்குள்ளாகின்றனா்.

கோடையில் பட்டாசு உற்பத்தியை நிறுத்தி வைப்பது தொடா்பாக தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுப்பது தொடா்பான பரிந்துரைகளை வழங்குரைஞா்கள் வழங்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஜூன் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.