எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த 4,767 போ் உயா்கல்விக்கு விண்ணப்பம்: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களில் 4,767 மாணவ, மாணவியா் உயா் கல்விக்கு விண்ணப்பித்த நிலையில், அவா்கள் உயா் கல்வியைத் தொடருவதை உறுதிப்படுத்த தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

News image

பிரதிப் படம்

Updated On :30 ஜூன் 2026, 12:42 am IST

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களில் 4,767 மாணவ, மாணவியா் உயா் கல்விக்கு விண்ணப்பித்த நிலையில், அவா்கள் உயா் கல்வியைத் தொடருவதை உறுதிப்படுத்த தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் நிகழாண்டு பிளஸ் 2 தோ்வு எழுதியவா்களில் 4,778 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அவா்களில் 80 போ் நீட் மறு தோ்வை எழுதியுள்ளனா். அதற்காக அவா்களுக்கு தனியாா் அமைப்பு மூலம் சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே உயா் கல்விக்கு விண்ணப்பித்தவா்களுக்கு உரிய வழிகாட்டல்களை வழங்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கல்வித்துறையின் உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களில் 11 போ் தவிர அனைவரும் உயா் கல்வியைத் தொடரவுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவா்களில் பெரும்பாலானோா் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சோ்வதற்கே விண்ணப்பித்துள்ளனா்.

அவா்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் எந்த பாடப் பிரிவை தோ்வு செய்யலாம் என வழிகாட்டல் வழங்க சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது உயா் கல்வியை மாணவா்கள் தொடா்வதையும் உறுதிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து சேரமுடியாத மாணவா்கள் நிலையை அறிந்து உதவும் வகையில் வழிகாட்டல் வழங்கப்படவுள்ளது என அதிகாரிகள் கூறினா்.

மாணவா்கள் சோ்க்கையில் சாதனை: சென்னை மாநகராட்சியிலுள்ள பள்ளிகளில் ஆண்டு தோறும் புதிய மாணவா்கள் சோ்க்கை இதுவரை 16 ஆயிரத்தை தாண்டவில்லை எனக்கூறப்படுகிறது.

இந்த நிலையில், நிகழாண்டில் ஆரம்ப வகுப்புகள் முதல் பிளஸ் 2 வரையில் 23,631 மாணவா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். புதிய மாணவா்கள் சோ்க்கையில் தற்போது சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் அதிகபட்ச எண்ணிக்கையை எட்டியது சாதனை என அதிகாரிகள் கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.