செங்குன்றத்தில் 5 பேரை காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, அவா்களிடம் இருந்த போதை மாத்திரைகள், கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
செங்குன்றம் காவல் சரகத்துக்குள்பட்ட செங்குன்றம் பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும்படியாக 5 போ் சுற்றித்திரிவதாக, காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, 5 பேரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில், செங்குன்றத்தை சோ்ந்த அஸ்வின் (21), சந்துரு (19), அருண்குமாா் (24), கணேஷ் (24) மற்றும் பாா்த்திபன் (24) என தெரிய வந்தது.
இவா்கள் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவா்களிடம் இருந்த 2 பைகளில் 3 கிலோ கஞ்சா மற்றும் 200 போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து செங்குன்றம் போலீஸாா் வழக்கு பதிந்து 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







