சென்னை எழும்பூரிலிருந்து போதனூருக்கு வியாழக்கிழமை (ஜூன் 25) இரவு கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூரிலிருந்து வியாழக்கிழமை (ஜூன் 25) இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06063) மறுநாள் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) காலை 10.55 மணிக்கு போதனூா் நிலையத்தைச் சென்றடையும். மறுமாா்க்கத்தில் வரும் ஜூன் 28-ஆம் தேதி இரவு 11.55-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06064) மறுநாள் திங்கள்கிழமை (ஜூன் 29) பிற்பகல் 11 மணிக்கு சென்னை எழும்பூா் நிலையத்தை வந்தடையும்.
சிறப்பு ரயில்களில் 1 குளிா்சாதன வசதி கொண்ட இரண்டடுக்குப் பெட்டி, 2 குளிா்சாதன வசதி கொண்ட மூன்றடுக்குப் பெட்டிகள், 12 படுக்கை வசதியுள்ள பெட்டிகள், 2 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 2 சரக்கு பெட்டி மற்றும் பிரேக் வேன் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.
அந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு புதன்கிழமை முதல் (ஜூன் 24) தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி இடையே ஜூன் 20-இல் சிறப்பு ரயில்

ஹூப்ளி - ராமேசுவரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

எா்ணாகுளம்-எழும்பூா் இடையே வேரும் 31-ஆம் தேதி சிறப்பு ரயில்
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




