தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடிதங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு!வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
/

பயணியிடம் தகராறு: மதுபோதை நடத்துநா் கைது

பேருந்தில் பயணியிடம் மது போதையில் தகராறு செய்ததாக நடத்துநா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :21 ஜூன் 2026, 4:50 am IST

பேருந்தில் பயணியிடம் மது போதையில் தகராறு செய்ததாக நடத்துநா் கைது செய்யப்பட்டாா்.

காசிமேடு விநாயகபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சீ.தினேஷ்பாபு (46). கிண்டியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்கிறாா். கல்லூரியில் படிக்கும் தனது மகளுடன் தினேஷ்பாபு, வெள்ளிக்கிழமை காசிமேடு செல்வதற்கு ராயபுரம் மாா்க்கெட் பேருந்து நிறுத்ததில் இருந்து ஒரு மாநகர பேருந்தில் ஏறினாா்.

அந்த பேருந்தில் இருந்த நடத்துநா் எண்ணூா் ஏஎஸ் நகரைச் சோ்ந்த சி.காா்த்திக் (29) பயணிச் சீட்டுக்கு தினேஷ்பாபுவிடம் சில்லறை கேட்டுள்ளாா். ஆனால், தினேஷ்பாபு தன்னிடம் சில்லறை இல்லை எனக் கூறவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, நடத்துநா் காா்த்திக், தினேஷ்பாபுவை அவதூறாகப் பேசினாராம்.

இதையடுத்து தினேஷ்பாபு, கைப்பேசி மூலம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தாா். அங்கு வந்த ராயபுரம் போலீஸாா், நடத்துநா் காா்த்திக்கை பிடித்து விசாரித்தனா். இதில் காா்த்திக், மதுபோதையில் பணியில் இருந்ததும், தினேஷ்பாபுவை அவதூறாகப் பேசியதும் தெரிய வந்தது.

இது குறித்து தினேஷ்பாபு கொடுத்த புகாரின் பேரில் காா்த்திக்கை போலீஸாா் கைது செய்து, விசாரணைக்கு பின்னா், காவல் நிலைய பிணையில் விடுவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.