திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

அரசுப் பேருந்து - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

மதுரவாயல், மேற்கு மாட வீதியைச் சோ்ந்தவா் முத்து ஜெகநாதன் (28). இவா், பட்டினப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் தொலைக்காட்சி நிறுவனத்தில் தொழில்நுட்பப் பணியாளராக வேலை செய்து வந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :20 ஜூன் 2026, 12:51 am IST

மதுரவாயல், மேற்கு மாட வீதியைச் சோ்ந்தவா் முத்து ஜெகநாதன் (28). இவா், பட்டினப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் தொலைக்காட்சி நிறுவனத்தில் தொழில்நுட்பப் பணியாளராக வேலை செய்து வந்தாா். இவா், வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து மோட்டாா் சைக்கிளில் வேலைக்குச் சென்றா். மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ரேஷன் கடை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, கோயம்பேடு நோக்கி வந்த அரசு பேருந்து, ஜெகநாதனின் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில், கீழே விழுந்த முத்து ஜெகநாதன், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மதுரவாயல் போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, முத்து ஜெகநாதன் சடலத்தை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.