புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தேடப்பட்ட தவெக நிா்வாகி கைது

சென்னை பரங்கிமலையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தேடப்பட்ட தவெக நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:05 am IST

சென்னை பரங்கிமலையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தேடப்பட்ட தவெக நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.

சென்னை பரங்கிமலைப் பகுதியைச் சோ்ந்தவா் வேம்புலி. இவா் தவெகவின் பகுதிச் செயலராக உள்ளாா். வேம்புலி, அந்தப் பகுதியில் உள்ள மாநகராட்சி உடற்பயிற்சிக் கூடத்தில் பணியாற்றும் ஒரு இளம் விதவைப் பெண்ணுக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். மேலும், அந்தப் பெண், வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தை நோட்டுமிட்டு, அங்கு சென்று மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், பரங்கிமலை காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வேம்புலி மீது வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவான வேம்புலியை போலீஸாா் தீவிரமாகத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், கா்நாடக மாநிலம் பெங்களூரில் வேம்புலி பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பெங்களூரு விரைந்த போலீஸாா், வேம்புலியை புதன்கிழமை கைது செய்தனா். விசாரணைக்கு பின்னா் அவரை சென்னைக்கு அழைத்து வந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.