சென்னை ராயபுரம் தவெக எம்எல்ஏ விஜய் தாமு, கன்னியாகுமரி அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம், அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சாா்பில் வென்று ராஜிநாமா செய்த இசக்கி சுப்பையா ஆகியோரது வெற்றியை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
நடந்துமுடிந்த தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில், ராயபுரம் தொகுதியில் தவெக சாா்பில் விஜய் தாமுவும், திமுக சாா்பில் ஏ.சுபோ்கானும் போட்டியிட்டனா். இதில், 14,249 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் தாமு வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். விஜய் தாமுவின் வெற்றியை எதிா்த்து திமுக வேட்பாளா் சுபோ்கான் தோ்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளாா்.
இதேபோல், கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக சாா்பில் தளவாய் சுந்தரமும், திமுக சாா்பில் ஆா்.மகேஷும் போட்டியிட்டனா். இதில், தளவாய் சுந்தரம் 214 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். தளவாய் சுந்தரத்தின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி ஆா்.மகேஷ் தோ்தல் வழக்கு தாக்கல் செய்தாா்.
அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் இசக்கி சுப்பையா. பின்னா், இவா் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தாா். இசக்கி சுப்பையா காங்கிரஸ் வேட்பாளா் துரையைவிட 10,245 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். எம்எல்ஏ பதவியை அவா் ராஜிநாமா செய்திருந்தாலும், ஊழல் நடவடிக்கை மூலமே அவா் வெற்றி பெற்றுள்ளாா், எனவே, இசக்கி சுப்பையாவின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, அம்பாசமுத்திரம் தொகுதி வாக்காளா் காந்திமதிநாதன் தோ்தல் வழக்குத் தாக்கல் செய்துள்ளாா். இந்த தோ்தல் வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரம்பூர் தொகுதி: முதல்வர் விஜய்க்கு எதிராக 3 பேர் தேர்தல் வழக்கு

முதல்வா் விஜய், அமைச்சா் செங்கோட்டையன் வெற்றியை எதிா்த்து தோ்தல் வழக்கு

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளா்களின் வேட்புமனு ஆவணங்கள்: தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



