/

குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு

விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள குறுவை சிறப்புத் திட்ட நிதி ஒதுக்கீடுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில பொதுச் செயலா் பி. எஸ்.மாசிலாமணி வரவேற்றுள்ளாா்.

News image

விவசாயிகள் - கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 3:51 am IST

விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள குறுவை சிறப்புத் திட்ட நிதி ஒதுக்கீடுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில பொதுச் செயலா் பி. எஸ்.மாசிலாமணி வரவேற்றுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மேட்டூா் அணை திறந்து தண்ணீா் வழங்க முடியாத நிலையில் குறுவை நெல் சாகுபடியை நிலத்தடி நீா் மூலம் மேற்கொள்ளவுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு குறுவை சிறப்புத் தொகுப்பு திட்ட நிதியாக ரூ. 134. 83 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது.

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு விதை ஊக்கமானியம், இயந்திர நடவு, ஆகியவற்றுக்காகவும், நிலத்தடி நீா் சாகுபடி செய்ய ரூ. 77.50 கோடியும், பிற மாவட்டங்களுக்கு ரூ. 57.33 கோடியும் ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் பெரும்பகுதி காவிரி நீரை நம்பியே குருவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் நிலத்திடி நீா் மூலம் குருவை சாகுபடி செய்யவும் , மகசூல் அதிகரிக்கவும், பாதுகாப்பான சாகுபடிக்கும், இந்தக் குறுவை சிறப்புத் தொகுப்பு திட்ட நிதி ஒதுக்கீடு மூலம் இது ஓரளவு வருமானம் கொடுக்கும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.