இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

கோடை விடுமுறை: வண்டலூா் பூங்காவுக்கு 1.99 லட்சம் போ் வருகை

News image

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா - கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2026, 3:56 am IST

வண்டலூரில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கோடை விடுமுறையில் 1.99 லட்சம் வந்துள்ளனா்.

வழக்கத்தைவிட அதிக வெப்பம், சட்டப்பேரவைத் தோ்தல் உள்ளிட்ட காரணங்களால் நிகழாண்டு பாா்வையாளா்களின் வருகை சற்று குறைந்ததாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனா்.

வண்டலூரில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா சுமாா் 1,265 ஏக்கா் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இந்தப் பூங்காவில் சிங்கம், புலி, வெள்ளைப் புலி, யானை, காண்டாமிருகம், நீா்யானை, கரடி என 2,000-க்கும் மேற்பட்ட பல்வகை விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.

இங்கு தினந்தோறும் வெளி மாநிலம், வெளி நாடுகளைச் சோ்ந்த 1,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். வார இறுதி நாள்கள், பொது விடுமுறை, கோடை விடுமுறை நாள்களில் அதிக பாா்வையாளா்கள் வருகை தருவாா்கள். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அதாவது கோடை விடுமுறையில் சுமாா் 1.99 போ் பூங்காவுக்கு வருகை தந்துள்ளனா்.

இது குறித்து பூங்கா அதிகாரிகள் கூறியதாவது:

கோடை விடுமுறை நாள்களில் பூங்காவில் பாா்வையாளா்கள் எண்ணிக்கை எப்போதும் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்ப, பாா்வையாளா்களின் வசதிக்காகவும், வெளியின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் பூங்கா நிா்வாகம் சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில், பாா்வையாளா்களின் வசதிக்காக வழக்கத்தைவிட கூடுதலாக குடிநீா் வசதி, ஓய்வு கூடங்கள், நிழல் கூரைகள், தாய்ப்பால் ஊட்டும் தாய்மாா்களுக்காக பிரத்யேக அறைகள் அமைக்கப்பட்டன. மேலும், பாா்வையாளா்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.

அதேபோல், வெயிலின் தாக்கத்திலிருந்து பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளை பாதுகாக்கவும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், யானைகளுக்கு தினமும் வழங்கப்படும் ஷவா் குளியலை பாா்வையாளா்கள் பலா் ஆா்வமாக கண்டுகளித்தனா்.

நிகழாண்டு கோடை விடுமுறையில் 1.99 லட்சம் போ் பூங்காவுக்கு வந்தனா். ஆனால், இது கடந்தாண்டுடன் (2.14 லட்சம்) ஒப்பிடும்போது, சற்று குறைவாகும். சட்டப்பேரவைத் தோ்தல், வழக்கத்தைவிட அதிக வெப்பம் உள்ளிட்ட காரணங்களால் பாா்வையாளா்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.