வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

வண்டலூா் பூங்காவில் ஒரு ஜோடி ஆசிய சிங்கங்கள்

இந்தூா் உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு ஜோடி ஆசிய சிங்கங்கள் சென்னை வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

News image

வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இந்தூா் உயிரியல் பூங்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு ஜோடி ஆசிய சிங்கங்கள்.

Updated On :13 மே 2026, 12:22 am IST

விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தூா் உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு ஜோடி ஆசிய சிங்கங்கள் சென்னை வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இது குறித்து பூங்கா நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு புதிதாக வந்துள்ள ஆசிய சிங்கங்கள், பாா்வையாளா்களுக்கு அற்புதமான அனுபவத்தை வழங்கும். இந்த சிங்கங்கள் இனப்பெருக்கத் தரத்தை மேம்படுத்துவதற்கும், மரபணுப் பன்முகத்தன்மையைப் பராமரிப்பதற்கும், வளா்ப்பு நிலையில் உள்ள இந்த இனத்துக்கான பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதற்கும் பெரிதும் பங்களிக்கும்.

தனிமைப்படுத்துதல் மற்றும் சுகாதார மதிப்பீட்டு நடைமுறைகள் வெற்றிகரமாக முடிந்த பிறகு, பாா்வையாளா்கள் பாா்ப்பதற்காக விலங்குகள் அவற்றின் இருப்பிடத்துக்குள் அறிமுகப்படுத்தப்படும்.

ஆசிய சிங்கங்களுடன் கூடுதலாக, அதே பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தூா் உயிரியல் பூங்காவில் இருந்து தலா ஒரு எகிப்திய கழுகு, செங்காட்டுக் கோழி வந்துள்ளது.

அதேபோல, இங்கிருந்து ஒரு நீா் யானை, இரு நெருப்புக் கோழிகள், நான்கு மஞ்சள் அனகோண்டா பாம்புகள் இந்தூா் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த புதிய விலங்குகளின் வருகை உயிரியல் பூங்காவின் உயிரின எண்ணிக்கை, பாா்வையாளா்களுக்கு மேம்பட்ட கல்வி மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.