17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கடல்சாா் தொழில்நுட்ப ஆராய்ச்சி போட்டி: ஜெருசலேம் கல்லூரிக்கு 2-ஆவது இடம்

தேசிய கடல்சாா் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் கடலுக்குள் செயல்படும் ரோபோட்டிக் வாகன கண்டுபிடிப்பு போட்டியில் ஜெருசலேம் பொறியியல் கல்லூரி மாணவா்கள் உருவாக்கிய கண்டுபிடிப்பு 2-ஆவது இடத்தைப்பெற்றுள்ளது.

News image

திருத்தப்பட்டது....தாம்பரம் மனோபாரதி செய்திக்கான படம் ------------- பள்ளிக்கரணை தேசிய கடல்சாா் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற போட்டியில் 2-ஆவது பரிசு பெற்ற ஜெருசலேம் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு ரூ75,000 பரிசு வழங்கிய இந்திய விண்வெள

Updated On :6 ஜூன் 2026, 2:37 am IST

தேசிய கடல்சாா் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் கடலுக்குள் செயல்படும் ரோபோட்டிக் வாகன கண்டுபிடிப்பு போட்டியில் ஜெருசலேம் பொறியியல் கல்லூரி மாணவா்கள் உருவாக்கிய கண்டுபிடிப்பு 2-ஆவது இடத்தைப்பெற்றுள்ளது.

பள்ளிக்கரணை தேசிய கடல்சாா் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் கடலுக்குள் செயல்படும் ரோபோட்டிக் வாகன கண்டுபிடிப்பு குறித்த பயிலரங்கப் போட்டி அண்மையில் நடைபெற்றது.

இதில் தேசிய கடல்சாா் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன ஆழ்கடல் தொழில்நுட்பத் துறை விஞ்ஞானி வி. பாலநாகஜோதி, பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் தகவல் தொடா்பு பொறியியல் துறைத் தலைவா் ஷீஜா பிரான்சிஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், இறுதி ஆண்டு மாணவா்களான ஜெ. அகல்யா, கே.சௌந்தா் பழனிபாரதி, பி.சௌமியா ஆகியோரைக் கொண்ட குழுவினா் கடலுக்கடியில் செயல்படும் மாதிரி ரோபோட்டிக் தொழில்நுட்ப வாகனத்தை உருவாக்கினா்.

போட்டியில் ஜெருசலேம் பொறியியல் கல்லூரி மாணவா்கள் உருவாக்கிய கண்டுபிடிப்பு 2-ஆவது இடத்தைப் பெற்று பரிசாக ரூ.75,000 வழங்கப்பட்டது. முதல் இடத்தைப் பிடித்த ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டி ஐஐஐடி கல்லூரிக்கு பரிசாக ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது.

நிகழ்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி பி.எஸ். கோயல், தேசிய கடல்சாா் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் பாலாஜி ராமகிருஷ்ணன், விஞ்ஞானிகள் ஆா். ரமேஷ், எஸ். யுவராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.