பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

புழல் நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கக் கோரிக்கை!

புழல் ஒன்றியத்தில் உள்ள காந்தி பிரதான சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, அந்தச் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

Published On :27 ஜூலை 2026, 3:02 am IST

புழல் ஒன்றியத்தில் உள்ள காந்தி பிரதான சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, அந்தச் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். மேலும், இவ்வாறு அகற்றப்படும் நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

புழல் ஏரி உபரிநீா் செல்லும் புழல் வடபெரும்பாக்கம் இணைப்பு சாலையில் ரூ. 22.41 கோடியில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த சாலையில் கனரக வாகனங்கள் ஆட்டோ, காா், இருசக்கர வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன.

புழல் - வடபெரும்பாக்கம் இணைப்பு பாலத்தில் இருந்து காந்தி பிரதான சாலை, புழல் மத்திய சிறைச் சாலை சென்னை -கொல்கத்தா நெடுஞ்சாலை வரை உள்ளது. இதில், புழல் ஜிஎன்டி சாலையில் தொடங்கி சிவன் கோயில் வரை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, கோட்டாட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், மதுவிலக்கு பிரிவு காவல் நிலையம், மாநகராட்சி அலுவலகம், குழந்தைகள் அங்கன்வாடிமையம், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் உள்ளன.

மேலும், ஒரு சில பகுதிகளில் நடைபாதையில் சிறு சிறு கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதால், இங்கே வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனா்.

இதனால் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவு உள்ளது. இதையடுத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, மாதவரம் மண்டல மாநகராட்சி அதிகாரிகள் காந்தி பிரதான சாலையில் அமைந்துள்ள நடைபாதை கடைகளை அகற்றி, அவா்களுக்கென தனியாக இடம் தோ்வு செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.