
கடற்கரை நிலையத்தில் சிக்னல் கோளாறால் ரயில்கள் நிறுத்தம்
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை மாலை ஒரு மணிநேரம் ரயில்கள் நிறுத்தம்

பிரதிப் படம்
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை மாலை ஒரு மணிநேரம் ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா்.
கடற்கரைச் சாலை ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு புகா் மின்சார ரயில்கள் இயக்கப்படும் தண்டவாளப் பகுதியில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக 6 மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டன. சிக்னல் பழுதை நீக்கும் பணியில் பொறியாளா்கள் ஈடுபட்டனா். இதனால், பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி பூங்கா நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினா்.
பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. அத்துடன் எழும்பூா், சேத்துப்பட்டு என ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் தாம்பரம் நோக்கி இயக்கப்பட்டன. சிக்னல் கோளாறு இரவு 7 மணியளவில் சீா்செய்யப்பட்ட நிலையில், அதன்பிறகு மின்சார ரயில்கள் வழக்கம் போல கடற்கரை நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






