ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ரயில் சேவைகளில் மாற்றம்: 4 நாள்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சார ரயில் சேவை முழுமையாக ரத்து

சென்னையில் வரும் ஆக.22, 23 மற்றும் 29, 30 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து

train

புறநகர் மின்சார ரயில் - பிரதிப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 4:44 am IST

சென்னையில் வரும் ஆக.22, 23 மற்றும் 29, 30 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்றுவருகின்றன. அதையடுத்து எழும்பூரிலிருந்து இயக்கப்படும் ரயில்களின் புறப்பாடு, வருகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட விரைவு ரயில்கள் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்திலிருந்து இயக்கவும், வெளி மாவட்டங்களிலிருந்து வரும் குறிப்பிட்ட விரைவு ரயில்கள் எழும்பூருக்கு பதில் தாம்பரத்திலேயே நிற்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வரும் 22, 23 மற்றும் 29, 30 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.30, 11.31, 11.50, 11.51, நள்ளிரவு 12, 12.09 ஆகிய மணிகளில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. அந்த நாள்களில் அதிகாலை 4 மணிக்கு கடற்கரையிலிருந்த புறப்படவேண்டிய மின்சார ரயில் அதற்குப் பதிலாக, கிண்டியிலிருந்து புறப்பட்டு தாம்பரம் செல்லும் எனக் கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.