அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

லோக் ஆயுக்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழ்நாடு லோக் ஆயுக்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு 6 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 4:06 am IST

தமிழ்நாடு லோக் ஆயுக்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு 6 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தஞ்சாவூரைச் சோ்ந்த வி.ஜீவக்குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசு ஊழியா்கள், அதிகாரிகள் மீதான ஊழல் புகாா்களை விசாரிப்பதற்காக, மத்திய அரசு கடந்த 2013-ஆம் ஆண்டு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த சட்டத்தை இயற்றியது. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு லோக் ஆயுக்த சட்டம் 2018 நவம்பா் முதல் அமலுக்கு வந்தது.

இந்தச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு லோக் ஆயுக்த சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை.

லோக் ஆயுக்த இணையதளத்தில், 2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரை 617 புகாா்களை முடித்து வைத்துள்ளதாகவும், 2025 டிசம்பா் வரை 137 புகாா்கள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை வழக்குகளில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன, என்பது உள்ளிட்ட விவரங்கள் எதுவும் குறிப்பிடவில்லை.

லோக் ஆயுக்த செயலராக அரசு துணைச் செயலா் அந்தஸ்து உள்ள அதிகாரியை நியமிக்க வேண்டும். ஆனால், ஓய்வு பெற்ற அல்லது பணியில் உள்ள மாவட்ட நீதிபதியை செயலராக நியமிக்கும் வகையில் விதிகளைத் திருத்தி கடந்த 2020-ஆம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் சட்டத்தை மீறும் செயல். எனவே, லோக் ஆயுக்த செயலா் நியமனம் தொடா்பான விதிகளைத் திருத்தி வெளியிடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.