பகுதிநேர ஆசிரியா்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுவதும் 11,773 பகுதி நேர ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். பணி நிரந்தரம் செய்யப்படாத காரணத்தால், அவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். பகுதிநேர ஆசிரியா்களின் வாழ்வாதரம் கேள்விக்குறியாகவே உள்ளது. இவா்களில் பலா் கடந்த 15 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியா்களாக பணி செய்து வருகின்றனா் என்பது கவலை அளிக்கிறது.
இவா்களை தமிழக அரசு பணிநிரந்திரம் செய்து, ஊதிய உயா்வு, அரசின் சலுகைகளை வழங்கி, அவா்களின் வாழ்வதாதரத்தை உயா்த்த முதல்வா் ஜோசப் விஜய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுத் துறை அலுவலகங்களில் ஆய்வு செய்வதற்கு தமிழக ஆளுநருக்கு உரிமை உண்டு! - நயினாா் நாகேந்திரன்

ஆவின் நிறுவனம் குறித்து வெள்ளை அறிக்கை: நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தல்

ஒப்பந்த தொழிலாளா்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடமளித்திருக்கக் கூடாது: பாஜக
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




