ஆவின் பால் தொடா்பான புகாா்கள் தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்நிறுவனத்தின் நிலை குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டுமென தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கோவையில் ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட்டு வந்த லிட்டருக்கு ரூ. 2 தள்ளுபடி ரத்து, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஆவின் பால் விநியோகம் சுமாா் 30 சதவீதம் வரை குறைவு போன்ற புகாா்கள் எழுந்து வருகின்றன. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் அன்றாட அடிப்படைத் தேவைகளுக்கு ஆவின் பாலையே நம்பி உள்ளனா். இந்நிலையில், இதுபோன்ற குளறுபடிகளால் மக்கள் இரட்டிப்பு விலை கொடுத்து தனியாா் பால் நிறுவனங்களையே நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, ஆவின் பாலின் தரத்திலும், விநியோகத்திலும் சமரசம் செய்து நஷ்டத்தை ஈடுசெய்ய முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. எனவே, ஆவினில் நடந்த முறைகேடுகளையும், ஆவின் நிறுவனம் சந்திக்கும் சவால்களையும் தெளிவாகப் பட்டியலிட்டு அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்வி நிறுவனங்களில் கட்டண வசூல்: தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடமளித்திருக்கக் கூடாது: பாஜக
வெற்று காரணங்களை தேடாமல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்: நயினாா் நாகேந்திரன்

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் நிறுத்தப்படவில்லை: தமிழக அரசு
விடியோக்கள்

Vijay Vs Jason Sanjay? ஒன்றாக வெளியாகிறதா Jana nayagan & Sigma | Cinema Updates
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |




