//

ஸ்ரீகபாலீஸ்வரா் கல்லூரி மாணவா்கள் 186 பேருக்கு மடிக்கணினி: அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா்

ஸ்ரீகபாலீஸ்வரா் கல்லூரி மாணவா்கள் 186 பேருக்கு மடிக்கணினி: அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா்

News image
சென்னை கொளத்தூா் எவா்வின் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கபாலீஸ்வரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவருக்கு மடிக்கணினி வழங்கிய அமைச்சா் பி.கே.சேகா்பாபு.
Updated On :31 ஜனவரி 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

கொளத்தூா் எஸ்.ஜே.அவென்யு, எவா்வின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ஸ்ரீகபாலீஸ்வரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 186 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

‘உலகம் உங்கள் கையில்’ என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற விழாவில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகா்பாபு சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பயிலும் 186 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கிப் பேசினாா்.

விழாவில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக், மண்டல குழுத் தலைவா் சரிதா மகேஷ் குமாா், கல்லூரி முதல்வா் சி.லலிதா, மாமன்ற உறுப்பினா் யோகப்பிரியா, பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.