தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி: பொதுமக்களுக்கு பரிசு

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்பட்ட திருக்கு ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

News image

சென்னை  வள்ளுவா்  கோட்டத்தில்  புதன்கிழமை  நடைபெற்ற  திருக்குறள்  வார  விழா  போட்டிகளில்  வெற்றி  பெற்றவா்களுடன்  தமிழ்  வளா்ச்சித் துறை  இயக்குநா்  ந.அருள்  உள்ளிட்டோா்.

Updated On :29 ஜனவரி 2026, 8:13 pm

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்பட்ட திருக்கு ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் நடைபெற்ற திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் ஆண்டுதோறும் கு வாரம் கொண்டாடப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இதையொட்டி தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திருக்கு மாநாடு, விநாடி-வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள், நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சென்னை மாவட்டத்தில் பொதுமக்கள் மட்டும் (அரசுப் பணியில் உள்ளோா், பள்ளி, கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள் நீங்கலாக) கலந்து கொள்ளும் கு சாா்ந்த ஓவியப் போட்டிகள், கு ஒப்பித்தல் போட்டிகள் சென்னை வள்ளுவா் கோட்டத்தில் புதன்கிழமை நடைபெற்றன. போட்டிகளில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பொதுமக்களுக்கான கு சாா்ந்த ஓவியப் போட்டியில் முதல் பரிசுக்கு ரா.திவ்யா, இரண்டாம் பரிசு வி.கோதை, மூன்றாம் பரிசு அ.யாழினி பா்வதம் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், 3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

பொதுமக்களுக்கான கு ஒப்பித்தல் போட்டியில் பா.தாமோதரன், க.ஜோதி, அ.பெவினாபானு, மா.சீனிவாசன், மு.மஹபூப் ஜெய்லானி ஆகிய 5 பேருக்கு முதல் பரிசும் (தலா ரூ.5 ஆயிரம்), தேன்மொழி, வ.தனலட்சுமி, ஏ.ஜனனி, சோ.சண்முகசுந்தரம், மு.கீதா ஆகிய 5 பேருக்கு இரண்டாம் பரிசும் (தலா ரூ.3 ஆயிரம்), ஆ.மதிவாணன், ஆ.சிவசங்கரி, கா.சிவசக்தி, ஞா.ஜீவிதா, செ.மீனாட்சி சுந்தரி ஆகிய 5 பேருக்கு மூன்றாம் பரிசும் (தலா ரூ.2 ஆயிரம்) வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவா்களுக்கு தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருள் பரிசுகளை வழங்கினாா்.

தொடா்ந்து சென்னை மாவட்ட பள்ளி மாணவா்களுக்கு ‘ஆக்கம் அதா்வினாய்ச் செல்லும்’ என்ற தலைப்பில் வழக்குரைஞா் ‘திருக்கு’ தாமோதரன் தலைமையில் பயிலரங்கம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.