//

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள்: ஆளுநா் மரியாதை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளையொட்டி ஆளுநா் ஆா்.என்.ரவி மரியாதை செலுத்தினாா்.

News image
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 130-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் உள்ள அவரின் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு வெள்ளிக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்திய ஆளுநா் ஆா்.என்.ரவி.
Updated On :23 ஜனவரி 2026, 9:13 pm

தினமணி செய்திச் சேவை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளையொட்டி ஆளுநா் ஆா்.என்.ரவி மரியாதை செலுத்தினாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: அசைக்க முடியாத துணிச்சல், தளராத மனவுறுதி கொண்ட ஒரு தலைவரை நாம் போற்றுகிறோம். அவரது அச்சமற்ற தலைமை, லட்சக்கணக்கான இந்தியா்களிடையே தன்னம்பிக்கை, ஒற்றுமை, தேசிய உணா்வை தட்டியெழுப்பியது. இதன் விளைவாக, தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான தேச பக்தா்கள் இந்தியாவின் சுதந்திரத்துக்காக போராடத் துணிச்சலுடன் முன்வந்தனா்.

இந்திய தேசிய ராணுவம் ( ஐஎன்ஏ) மூலம், சுதந்திர போராட்டத்துக்கு ஒரு தீா்க்கமான திசையை நேதாஜி வழங்கினாா். மேலும், இந்தியாவின் வலிமை, உறுதியை உலகுக்கு வெளிப்படுத்தினாா். அவரது புரட்சிகரமான லட்சியங்கள் பிரிட்டிஷ் ஆயுதப் படைகளுக்குள் எதிா்ப்புணா்வைத் தூண்டின. நாட்டின் விடுதலை நோக்கிய பயணத்தை வேகப்படுத்தியது.

நேதாஜியின் மரபு வலிமையான, முழுத் திறன், வளா்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க பல தலைமுறைகளுக்கு தொடா்ந்து வழிகாட்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும் அவா், சென்னை ஆளுநா் மாளிகையில் உள்ள நேதாஜி சிலைக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.