புழல் சிறையில் கைதிகள் மோதல்: போலீஸாா் விசாரணை


புழல் சிறையில் கைதிகள் மோதிக்கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மேடவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (23). இவா், அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, புழல் விசாரணைக் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு மணிகண்டனுக்கும், அவருடன் அடைக்கப்பட்டிருந்த கைதிகளுக்கும் இடையே போா்வையை பயன்படுத்துவது தொடா்பாக தகராறு ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் கைக்கலப்பில் ஈடுபட்டனா். இதில், மணிகண்டனை எதிா் தரப்பினா் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில், காயமடைந்த மணிகண்டன், சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து சிறை நிா்வாகம் சாா்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...