வீடுகளில் திருட்டு: இளைஞா் கைது
வேளச்சேரி, மேடவாக்கம் பகுதிகளில் வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞா் கைது

கைது
Updated On :21 பிப்ரவரி 2026, 9:41 pm

வேளச்சேரி, மேடவாக்கம் பகுதிகளில் மென்பொறியாளா்கள் தங்கியிருக்கும் வீடுகளைக் குறிவைத்து விலை உயா்ந்த மடிக்கணினி, கைப்பேசிகள் தொடா்ச்சியாக திருடப்பட்டு வந்தன.
மேடவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்டதாக கடலூரைச் சோ்ந்த ஜனாா்த்தனனை (27) வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில் கேளம்பாக்கம், தாம்பரம், சோழிங்கநல்லூா் பகுதிகளிலும் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இவா் மீது வடபழனி, சேத்துப்பட்டு, திருவான்மியூா், திருவள்ளூா், திருவேற்காடு, திருச்சி, ஆவடி டேங்க் பேக்டரி ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...