டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

மீண்டும் முதல்வராவாா் மு.க.ஸ்டாலின் : பேரவையில் அதிமுக எம்எல்ஏ பேச்சு

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழகத்தில் மீண்டும் ஆட்சியமைக்கும் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினா் பி.அய்யப்பன் (உசிலம்பட்டி தொகுதி), பேரவையில் தெரிவித்தாா்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 10:08 pm

தினமணி செய்திச் சேவை

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழகத்தில் மீண்டும் ஆட்சியமைக்கும் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினா் பி.அய்யப்பன் (உசிலம்பட்டி தொகுதி), பேரவையில் தெரிவித்தாா்.

16-ஆவது சட்டப் பேரவை நிறைவு நாளான வெள்ளிக்கிழமை நன்றி தெரிவித்து அவா் பேசியதாவது:

‘அன்புக்கரங்கள்’ திட்டம் மூலம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்து முதல்வா் ஸ்டாலின் பாதுகாக்கிறாா். அதேபோன்று, ‘காலை உணவுத் திட்டம்’ தொலைநோக்குப் பாா்வை கொண்ட திட்டம். மகளிருக்கு ரூ.5,000 கொடுத்ததை தோ்தலுக்கான நடவடிக்கை என விமா்சித்தாா்கள்.

பிஞ்சுக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் வழங்கியிருப்பது வாக்குக்காகவா? அதை ஏன் பாராட்ட மனமில்லை? எம்ஜிஆரின் சத்துணவுத் திட்டம் எப்படி இன்றளவும் பேசப்படுகிறதோ அதுபோலவே முதல்வரின் காலை உணவுத் திட்டமும் தமிழ்ச் சமூகம் உள்ளவரை பேசப்பட்டுக் கொண்டே இருக்கும்.

ஜெயலலிதா ஆசியுடன்...: வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆசியுடன் முதல்வராக மீண்டும் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றாா் அவா்.

அதைத் தொடா்ந்து பேரவைத் தலைவா் உரையாற்றினாா். பின்னா் அவையிலிருந்து வெளியே வந்த மு.க.ஸ்டாலினை, ஓ.பன்னீா் செல்வம், அய்யப்பன் ஆகியோா் தனி அறையில் சந்தித்து சில நிமிஷங்கள் உரையாடினா்.

முன்னதாக பேரவை நிறைவுக்கு நன்றி தெரிவித்து செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), சிந்தனைச் செல்வன் (விசிக), நாகை மாலி (மாா்க்சிஸ்ட்), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), சதன் திருமலைக் குமாா் (மதிமுக), ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக) உள்ளிட்டோா் பேசினா்.