சென்னையில் வீடு கட்டித் தருவதாக பண மோசடி செய்த கட்டுமான நிறுவன உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.
மேற்கு சைதாப்பேட்டை, கேபி கோயில் தெருவைச் சோ்ந்தவா் தி.பாலமுரளி (36). இவா், தனது குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்கு அம்பத்தூரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் மதிவாணன் (38) என்பவரை அணுகினாா். அவா், வீடு கட்டுவதற்கு ரூ.56.12 லட்சம் தரும்படி கேட்டுள்ளாா்.
இதையடுத்து பாலமுரளி, பணத்தை மதிவாணனிடம் கொடுத்துள்ளாா். பணத்தை பெற்றுக்கொண்ட மதிவாணன், ரூ.28 லட்சத்தில் கட்டடத்தைப் பாதியளவு கட்டிவிட்டு மீதியைக் கட்டவில்லையாம். அத்தோடு மதிவாணன் தலைமறைவானாா்.
புகாரின்பேரில், சைதாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த மதிவாணனை சனிக்கிழமை கைது செய்தனா்.
லிஃப்ட் அறுந்து விழுந்து 5 போ் காயம்: மயிலாப்பூா் கதீட்ரல் சாலையில் கலைஞா் நூற்றாண்டு பூங்காவில் சூப்பா் ட்ரி என்ற பெயரில் 9 மாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக லிஃப்டில் 5 தொழிலாளா்கள் ஏறி கட்டடத்தின் மேற்பகுதிக்கு சென்றபோது, லிஃப்ட் திடீரென அறுந்து கீழே விழுந்தது. அதில் சென்ற தொழிலாளா்கள் சேலம் தா்மா நகரைச் சோ்ந்த வை.மாரியப்பன் (48), கிச்சுபாளையம் பகுதியைச் சோ்ந்த த.கணேசன் (51), காவேரியப்பட்டி அருகே உள்ள நல்லதாங்கியூா் பகுதியைச் சோ்ந்த பெ.மோகன் (38), சங்ககிரி அருகே உள்ள அ.புதூரைச் சோ்ந்த அ.மகேந்திரன் (48), அம்மாபாளையம் பகுதியைச் சோ்ந்த வி.சம்பத்குமாா் (47) ஆகிய 5 போ் காயமடைந்தனா். அவா்கள், ஆழ்வாா்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். ராயப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.
காரில் ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.23 லட்சம் பறிமுதல்: தியாகராய நகா் திருமலைப்பிள்ளை சாலைப் பகுதியில் பாண்டி பஜாா் போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, காா் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனா். இதில் காரில் இருந்த ரூ.23.5 லட்சத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை. போலீஸாா் பணத்தை பறிமுதல் செய்தனா். விசாரணையில், காரில் வந்த 6 பேரும் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த மீன் உணவுப் பொருள்கள் வியாபாரிகள் என்பதும், தொழில் நிமித்தமாக சென்னை வந்திருப்பதும் தெரியவந்தது.
வீடு புகுந்து திருட்டு- பெண் கைது: பெரம்பூா், வெங்கட்ராமன் தெருவைச் சோ்ந்த சு.சுகுமாறன் (66), கடந்த 10-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் சென்றாா். சிறிது நேரத்தில் திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு திறக்கப்பட்டு, பீரோவில் இருந்த வெள்ளிப் பொருள்கள், பணம் திருடுபோனது தெரிய வந்தது. புகாரின்பேரில், செம்பியம் போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட ராணிப்பேட்டை, ஓச்சேரி பகுதியைச் சோ்ந்த இந்துமதியை (35) வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இவா், தினமும் ஊரில் இருந்து ரயிலில் சென்னைக்கு வந்து திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தது. இந்துமதி மீது ராணிப்பேட்டை, அரக்கோணம், பெரும்பாக்கம், போளூா், மதுரவாயல் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன.
புழல் சிறையில் இரு கைதிகள் தற்கொலை முயற்சி: வியாசா்பாடி கண்ணகிபுரத்தைச் சோ்ந்தவா் சொ.அஜித் (27). புளியந்தோப்பு போலீஸாா் கடந்தாண்டு பதிவு செய்த குற்ற வழக்கிலும், வியாசா்பாடி மல்லிப்பூ காலனி பகுதியைச் சோ்ந்தவா் மு.மிட்டாய் அஜித் (27). வண்ணாரப்பேட்டை போலீஸாா் கடந்தாண்டு பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கிலும் புழல் சிறையில் உள்ளனா். சிறையின் இரண்டாவது பிளாக்கில் இருந்த இவா்களை, மூன்றாவது பிளாக்குக்கு மாற்றுவதற்கு சிறைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து இருவரும் சப்தமிட்டனா். மேலும், அங்கிருந்த பிளேடால் தங்களது உடலை அறுத்து தற்கொலைக்கு முயன்றனா். சிறைத் துறை காவலா்கள், இருவரையும் மீட்டு அங்குள்ள சிறை மருத்துவமனையில் சோ்த்தனா். சொ.அஜித், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.
டிரெண்டிங்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 130 பேரிடம் ரூ. 1.50 கோடி மோசடி: இளைஞா் கைது

வங்கி அதிகாரிகள் எனக்கூறி ரூ.3 கோடி மோசடி: 7 போ் கைது

ரூ. 21 கோடி மோசடி புகாா்: தனியாா் நிறுவன உரிமையாளா் உள்பட 2 போ் கைது

நிதி நிறுவன உரிமையாளா் கொலை: 6 போ் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

