//

சென்னை மாநகராட்சி சாா்பில் 46 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் அகற்றம்!

சென்னை மாநகராட்சி சாா்பில் 46.21 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் அகற்றப்பட்டன.

News image
சென்னை மாநகராட்சி
Updated On :14 பிப்ரவரி 2026, 9:09 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சி சாா்பில் 46.21 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் அகற்றப்பட்டன.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி சாா்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொதுமக்கள் முன்கூட்டியே தரும் தகவலின்படி, வீடுகளில் இருந்து பழைய மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் உள்ளிட்ட திடக்கழிவுகளை பெற்று அகற்றிடும் புதிய நடவடிக்கை கடந்த 2025 தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் இதுவரை 18 சனிக்கிழமை நாள்களில் 2,165 பேரிடம் 858.40 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் பெறப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் சனிக்கிழமை 103 நபா்களிடம் இருந்து 46.21 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் பெறப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்துக்கு எடுத்து சென்று எரியூட்டி அகற்றப்பட்டது.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நடைபெறும் இச்சேவையை பெறுவதற்கு பொதுமக்கள் முன்கூட்டியே பெருநகர சென்னை மாநகராட்சியின் ‘நம்ம சென்னை’ செயலியில் பதிவு செய்ய வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்கப்பட வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள 94450 61913 எனும் சென்னை தலைமைச் செயலகத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் வாட்ஸ் அப் எண்ணுக்கு தகவலை அனுப்ப வேண்டும். இச்சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.